Google Family Link என்பது பெற்றோர் கட்டுப்பாடுகள் அம்சம் மூலம் உங்கள் குடும்பத்தை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் ஓர் ஆப்ஸ் ஆகும். ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு விதத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். உங்கள் குடும்பத்திற்கேற்ற சரியான சமநிலையைத் தேர்வுசெய்யவும் பிள்ளைக்கு ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கங்களை உருவாக்கவும் Family Link போன்ற கருவிகளை வடிவமைத்துள்ளோம். பிள்ளை சாதனத்தில் செலவிடும் நேரத்தை அறிந்துகொள்வது, அவரின் சாதன இருப்ப��டத்தைப் பார்ப்பது, அவரது தனியுரிமை அமைப்புகளை நிர்வகிப்பது போன்ற பலவற்றுக்கு Family Linkகின் எளிமையான கருவிகள் உதவுகின்றன.
Family Link மூலம் நீங்கள்:
டிஜிட்டல் கட்டுப்பாடுகளை அமைக்கலாம்
• சாதனத்தைப் பயன்படுத்தும் நேரத்தை அமைக்கலாம் — பிள்ளையின் சாதனத்திற்கான ஓய்வுநேரத்தையும் ஆப்ஸிற்கான நேர வரம்புகளையும் Family Linkகில் அமைத்து சிறந்த சமநிலையை உருவாக்கலாம்.
• வயதுக்கேற்ற உள்ளடக்கத்திற்கு வழிகாட்டலாம் — பிள்ளை பதிவிறக்க விரும்பும் ஆப்ஸை அனுமதிக்கலாம் தடுக்கலாம். அவருக்கேற்ற YouTube அனுபவத்தையும் Family Link மூலம் தேர்வுசெய்யலாம்: YouTubeல் கண்காணிப்புப் பயன்முறை அல்லது YouTube Kids.
பிள்ளையின் கணக்கை நிர்வகிக்கலாம் பாதுகாக்கலாம்
• அவரின் தனியுரிமையைப் பாதுகாக்கலாம் — Family Linkகின் அனுமதிகள் நிர்வாகம் மூலம் அவரது தரவு குறித்து சிறப்பாக முடிவெடுக்கலாம். பிள்ளை தனது சாதனத்தில் பதிவிறக்கிய ஆப்ஸ், Chrome உலாவியின் மூலம் அவர் அணுகும் இணையதளங்கள் & நீட்டிப்புகளுக்கான அனுமதிகளைப் பார்க்கலாம் நிர்வகிக்கலாம்.
• பிள்ளையின் கணக்கைப் பாதுகாக்கலாம் —Family Link மூலம் பிள்ளையின் கணக்கு, தரவு அமைப்புகளை நிர்வகிக்கலாம். பிள்ளை கடவுச்சொல்லை மறந்துவிட்டால் பெற்றோர் என்ற முறையில் அதை நீங்கள் மாற��றலாம், மீட்டமைக்கலாம், அவரது தனிப்பட்ட தகவலைத் திருத்தலாம், தேவையெனில் கணக்கையே நீக்கலாம்.
எங்கிருந்தும் தொடர்பில் இருக்கலாம்
•பிள்ளையின் இருப்பிடத்தை அறியலாம் — பிள்ளை எங்கு சென்றாலும் கண்டுபிடிக்க இது உதவும். பிள்ளையின் சாதனம் அவரிடம் இருக்கும் வரை Family Link மூலம் அவர் இருக்குமிடத்தை வரைபடத்தில் பார்க்கலாம்.
• அறிவிப்புகளையும் விழிப்பூட்டல்களையும் பெறலாம் — குறிப்பிட்ட இடத்திற்கு பிள்ளை வரும் நேரம், அங்கிருந்து செல்லும் நேரம் போன்ற முக்கிய அறிவிப்புகளை Family Link வழங்கும். மேலும் பிள்ளையின் மொபைலை ஒலிக்கச்செய்யலாம், சாதனத்தின் பேட்டரி அளவையும் பார்க்கலாம்.
முக்கியத் தகவல்
•பிள்ளையின் சாதனத்தைப் பொறுத்து Family Linkகின் கருவிகள் மாறுபடும். இணக்கமான சாதனங்களின் பட்டியலை https://families.google/familylink/device-compatibility/ பக்கத்தில் பார்க்கவும்
• Google Playயில் அவரது வாங்குதலையும் பதிவிறக்கங்களையும் நிர்வகிக்க Family Link உதவும். ஆனால் ஆப்ஸ் புதுப்பிப்புகள் (கூடுதல் அனுமதிகள் தேவைப்படுபவை உட்பட), முன்பு அனுமதித்த ஆப்ஸ், குடும்ப லைப்ரரியில் பகிரப்பட்டுள்ள ஆப்ஸ் நிறுவலுக்கு உங்கள் அனுமதி தேவையில்லை மேலும் உங்கள் பிள்ளை Google Playயின் பில்லிங் அமைப்பில் வாங்கினால் மட்டுமே வாங்குதலுக்கான அனுமதிகள் தேவை. பிற பில்லிங் அமைப்புகளுக்கு அவை பொருந்தாது. பிள்ளை நிறுவிய ஆப்ஸையும் அவற்றின் அனுமதிகளையும் Family Linkகில் பெற்றோர் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும்.
• கண்காணிக்கப்படும் சாதனத்தில் உள்ள ஆப்ஸைச் சரிபார்த்து, பிள்ளை பயன்படுத்தக்கூடாது என நீங்கள் நினைக்கும் ஆப்ஸை முடக்க வேண்டும். கவனத்திற்கு: Play, Google போன்று ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் சில ஆப்ஸை உங்களால் முடக்க முடியாமல் போகலாம்.
• பிள்ளை/டீன் ஏஜரின் சாதனம் இருக்கும் இடத்தை அறிய, அது ஆன் செய்யப்பட்டிருப்பதுடன் டேட்டா/வைஃபை மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுச் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
• கண்காணிக்கப்படும் Google கணக்குகளுக்கு மட்டுமே Family Link பெற்றோர் கட்டுப்பாடுகள் கிடைக்கும். கண்காணிக்கப்படும் Google கணக்குகள���ல் Search, Chrome, Gmail போன்றவற்றைப் பிள்ளைகள் பயன்படுத்தலாம். அடிப்படை டிஜிட்டல் விதிகளை அமைத்து பெற்றோர் அவற்றைக் கண்காணிக்கலாம்.
• பிள்ளையின் ஆன்லைன் செயல்பாடுகளை நிர்வகிக்க Family Link உதவினாலும் இணையத்தைப் பாதுகாப்பானதாக மாற்றாது. இணைய உள்ளடக்கங்களை Family Link கட்டுப்படுத்த முடியாது. ஆனால் பிள்ளை சாதனத்தைப் பயன்படுத்தும் நேரத்தைத் தீர்மானிக்கவும் ஆன்லைனில் அவரைப் பாதுகாக்கவும் இது உங்களுக்கு உதவும்.
புதுப்பிக்கப்பட்டது:
13 டிச., 2024