உங்கள் Google கணக்கை நீங்களே நிர்வகிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்புகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
கவனத்திற்கு: வயது குறைவான பிள்ளைகளைப் பொறுத்தவரை, Family Link மூலம் Google கணக்கை உருவாக்கவும் நிர்வகிக்கவும் பெற்றோர் உதவலாம். பிள்ளைகள் தங்கள் நாடு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச வயதை அடைந்ததும் தங்கள் கணக்கைத் தாங்களே நிர்வகிக்கலாம்.
உங்கள் நாட்டிற்கான வயது வரம்பைத் தெரிந்துகொள்ளுதல்
கீழே பட்டியலிடப்படாத பிற நாடுகள் அனைத்திலும் தன் Google கணக்கைத் தானே நிர்வகிப்பதற்கான குறைந்தபட்ச வயது 13 ஆகும்.
கவனத்திற்கு: இந்த வயது வரம்புகள் Google Workspaceஸுக்கு (Google Workspace for Education டொமைன்களில் உள்ள கணக்குகள் உட்பட) பொருந்தாமல் இருக்கலாம்.
ஆசியா- தென்கொரியா: 14+
- வியட்நாம்: 15+
- அரூபா: 16+
- கரீபியன் நெதர்லாந்து: 16+
- குராசோ: 16+
- ஸின்ட் மார்ட்டீன்: 16+
- ஆஸ்திரியா: 14+
- பல்கேரியா: 16+
- குரோஷியா: 16+
- சைப்ரஸ்: 14+
- செக் குடியரசு: 15+
- டென்மார்க்: 15+
- ஃபிரான்ஸ்: 15+
- ஜெர்மனி: 16+
- கிரீஸ்: 15+
- ஹங்கேரி: 16+
- அயர்லாந்து: 16+
- இத்தாலி: 14+
- லிதுவேனியா: 14+
- லக்சம்பர்க்: 16+
- நெதர்லாந்து: 16+
- போலந்து: 16+
- ரோமானியா: 16+
- சான் மாரினோ: 16+
- செர்பியா: 15+
- ஸ்லோவாக்கியா: 16+
- ஸ்லோவேனியா: 16+
- ஸ்பெயின்: 14+
- சிலி: 14+
- கொலம்பியா: 14+
- பெரு: 14+
- வெனிசுலா: 14+
சேவை சார்ந்த வயது வரம்புகள்
குறிப்பிட்ட சில Google சேவைகளுக்கென்று தனியாக வயது வரம்புகள் உண்டு. இதற்கான சில உதாரணங்கள்:
- YouTube: ஒரு YouTube வீடியோவில் வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தால் திரையில் அதைப் பற்றிய எச்சரிக்கை காட்டப்படும். 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பயனர்கள் மட்டுமே அந்த வீடியோவைப் பார்க்கலாம். வயதுக் கட்டுப்பாடுள்ள வீடியோக்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
- AdSense: 18+
- Google Ads: 18+
Disabled account due to age requirement
Across Google services, if we learn that you may not be old enough to have a Google Account, you'll have 14 days to update your account to meet age requirements or your account will be disabled.