உள்ளடக்கத்துக்குச் செல்

சாகிப் சிங் (சீக்கிய குரு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாய்

சாகிப் சிங்
Sahib Singh

ஜீ
ਸਾਹਿਬ ਸਿੰਘ
பாக்கித்தானின் பஞ்சாப் பகுதியின் அட்டோக்கில் கைவிடப்பட்ட சீக்கிய சமாதியின் உள்ளே வரையப்பட்டிருந்த சாகிப் சிங்கின் ஓவியம்.
பாஞ்ச் பியாரே
பதவியில்
1699 – 1704 or 1705
சுய தரவுகள்
பிறப்பு
சாகிப் சாந்த் நை

17 சூன் 1663
பீதர் (நவீன கருநாடகம், இந்தியா)
இறப்பு7 திசம்பர் 1704 அல்லது 1705
சாம்கௌர், பஞ்சாப், இந்தியா
இறப்பிற்கான காரணம்களச்சாவு
சமயம்சீக்கியம்
பெற்றோர்கள்
  • பாய் குரு நாராயணா (தந்தை)
  • அங்கமா பாய் (தாய்)
அறியப்படுதல்தொடக்க பாஞ்ச் பியாரே உறுப்பினர்
Occupationமுடிதிருத்துபவர்
Instituteகால்சா

சாகிப் சிங் (Sahib Singh) (17 ஜூன் 1663-7 டிசம்பர் 1704 அல்லது 1705) பாஞ்ச் பியாரே எனப்படும் “ஐந்து அன்புக்குரியவர்கள்” பட்டியலில் இவரும் ஒருவர். நாவி சாதியில் பிறந்த இவர் முன்பு சாகிப் சந்த் என்றும் அழைக்கப்பட்டார்.

இவரது பிறப்பிடம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குறித்து வெவ்வேறு கருத்துகள் உள்ளன. இருப்பினும் இவர் ஒரு முடிதிருத்தும் குடும்பத்தில் பிறந்தார் என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். சாகிப் சிங், பகத் சைனின் மறுபிறவி என்று ஆரம்பகால சீக்கிய இலக்கியங்கள் கூறுகின்றன.[1] இவர் இன்றைய கர்நாடகாவிலுள்ள பீதரில் பிறந்தார் என பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். பஞ்சாப்பின் ஹோசியார்பூர் மாவட்டத்தில் பிறந்தார் என மகான் கோஷ் கூறுகிறார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fenech, Louis E. (2021). The Cherished Five in Sikh History. Oxford University Press. pp. 53–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780197532843.
  2. Fenech, Louis E.; McLeod, W. H., eds. (2014). Historical Dictionary of Sikhism (3rd ed.). Rowman & Littlefield. p. 269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781442236011. பார்க்கப்பட்ட நாள் 18 March 2017.

மேலும் வாசிக்க

[தொகு]
  • Encyclopedia of Sikhism, by Harbans Singh.Published by Punjabi University, Patiala