உள்ளடக்கத்துக்குச் செல்

தேவாரம் (தேனி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவாரம் (ஆங்கிலம்:Thevaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,225 வீடுகளும், 16,079 மக்கள்தொகையும் கொண்டது. [1] இது 37.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]

வரலாறு

[தொகு]

நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் தேவாரம் ஒன்று . இப்பகுதியை ஆட்சி செய்த “பள்ளப்ப நாயக்கர்” விடுதலை போராட்டத்தில் விருபாட்சி கோபால நாயக்கருக்கு பல உதவிகளை செய்துள்ளார். [3]ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையக்காரர் கூட்டமைப்பில் இவரும் ஒருவர் . பின்னர் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் இப்பாளையத்தை ஆங்கிலேயர்கள் அழித்தனர்.[4]

ஆதாரங்கள்

[தொகு]
  1. Thevaram Population Census 2011
  2. தேவாரம் பேரூராட்சியின் இணையதளம்
  3. http://www.scribd.com/doc/57090866/ch-2
  4. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml


"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவாரம்_(தேனி)&oldid=2673393" இலிருந்து மீள்விக்கப்பட்டது