மெற்றோ பேருந்து (மலேசியா)
Appearance
நிறுவப்பட்டது | 1992 |
---|---|
தலைமையகம் | யு.எஸ்.ஜெ. 7, சுபாங் ஜெயா, சிலாங்கூர், மலேசியா |
Locale | கிள்ளான் பள்ளத்தாக்கு பகாங் கெந்திங் செம்பாக் |
சேவை வகை | பேருந்து சேவை |
Destinations | 160 |
மெட்ரோ பேருந்து (வணிகப் பெயர்: மெட்ரோ பஸ்) (ஆங்கிலம் (Metrobus Nationwide Sdn Bhd) என்பது மலேசிய நாட்டின் தனியாருக்குச் சொந்தமான பொது போக்குவரத்து நிறுவனமாகும். இந்தச் சேவை கிள்ளான் பள்ளத்தாக்கில் 1992-இல் தொடங்கப்பட்டது.
இது சுபாங் ஜெயாவை அடிப்படையாகக் கொண்டது. ரேபிட் பேருந்து. (Rapid KL) நிறுவனத்திற்கு அடுத்த நிலையில், கோலாலம்பூரில் இது இரண்டாவது பெரிய பேருந்து நிறுவனமாகும்.
பொது
[தொகு]மெட்ரோ பஸ் நாடு முழுமைக்குமான சேவைகளை நிசான் டீசல் (Nissan Diesel), இனோ (Hino) மற்றும் மெர்சிடிஸ் பென்சு பேருந்து தயாரிப்புகளுடன் கூடிய ஒரு பெரிய நிறுவனமாகும். ஆனாலும் பேருந்துகள் சேவையின் தரத்தில் குறைபாடுகள் தெரிவிக்கப் படுகின்றன.