1533
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1533 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1533 MDXXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1564 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2286 |
அர்மீனிய நாட்காட்டி | 982 ԹՎ ՋՁԲ |
சீன நாட்காட்டி | 4229-4230 |
எபிரேய நாட்காட்டி | 5292-5293 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1588-1589 1455-1456 4634-4635 |
இரானிய நாட்காட்டி | 911-912 |
இசுலாமிய நாட்காட்டி | 939 – 940 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 2 (天文2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1783 |
யூலியன் நாட்காட்டி | 1533 MDXXXIII |
கொரிய நாட்காட்டி | 3866 |
ஆண்டு 1533 (MDXXXIII) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 25 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னர் ஆன் பொலினைத் திருமணம் புரிந்தார்.
- சனவரி 26 - தாமசு ஆட்லி இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
- மார்ச் 30 - தாமஸ் க்ரான்மர் கன்டர்பரின் பேராயராக நியமிக்கப்பட்டார்.
- மே 23 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் அராகனின் கத்தரீனுடனான திருமணம் பேராயர் கிரான்மர் அறிவித்தார்.
- சூன் 1 - ஆன் பொலின் இங்கிலாந்தின் பெண்ணரசியாக வெஸ்ட்மின்ஸ்டரில் முடிசூடினார்.
- சூலை 11 - ஆன் பொல���னுடனான திருமண சர்ச்சையால் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி திருத்தந்தை ஏழாம் கிளமெண்டினால் உறவு ஒன்றிப்பில் இருந்து நீக்கினார்.
- சூலை 22 - உதுமானியப் பேரரசுக்கும், ஆஸ்திரியாவுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. முதலாம் பெர்டினாண்டு அங்கேரியின் மீதான தனது உரிமையை விட்டுக் கொடுத்தார்.
- செப்டம்பர் 7 - ஆன் பொலினுக்கு எலிசபெத் பிறந்தார். இக்குழந்தை பின்னர் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தாக முடிசூடினார்.
- நவம்பர் 15 - பிரான்சிஸ்கோ பிசாரோ பெருவின் குசுக்கோ நகரை வந்தடைந்தார்.
- டிசம்பர் 3 - நான்காம் இவான் தனது மூன்றாவது அகவையில் மாஸ்கோவின் பெரும் இளவரசராக முடிசூடினான்.
- மேன்முறையீட்டுக்கான தடைச் சட்டம் இங்கிலாந்தின் அதியுயர்பீடத் தலவனாக அரசனை அறிவித்தது. இதன் மூலம் திருத்தந்தைக்கு மேன்முறையீடு செய்வது இல்லாதொழிக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- செப்டம்பர் 7 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (இ. 1603)
- ஏகநாதர், மராத்திப் புனிதர் (இ. 1599)