Privacy, Safety, and Policy Hub
சமூக வழிகாட்டுதல்கள்
புதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 2024

Snap இல், தங்களை வெளிப்படுத்தவும், இக்கணத்தில் வாழவும், உலகைப் பற்றி அறியவும், ஒன்றாகச் சேர்ந்து மகிழவும் மக்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மனித முன்னேற்றத்திற்கு நாங்கள் பங்களிக்கிறோம். பரவலான சுய வெளிப்பாட்டைச் செய்ய ஊக்குவிப்பதன் மூலம் எங்கள் இலக்கை ஆதரிப்பதற்கு இந்தச் சமூக வழிகாட்டுதல்களை நாங்கள் உருவாக்கியுள்ள அத�� வேளையில், ஒவ்வொரு நாளும் எங்கள் சேவைகளை Snapchat பயனர்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என்பதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம்.
இந்த வழிகாட்டுதல்கள் எங்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெளிவாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
எங்களின் சமூகத்தில் சேர, உங்களுக்குக் குறைந்தபட்சம் 13 வயது இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

இந்த வழிகாட்டுதல்கள் Snapchat இல் உள்ள அனைத்து உள்ளடக்கத்திற்கும் (உரை, படங்கள், உருவாக்க AI, இணைப்புகள் அல்லது இணைக்கப்படும் கோப்புகள், ஈமோஜிகள், லென்ஸஸ் மற்றும் பிற ஆக்கப்பூர்வக் கருவிகள் போன்ற அனைத்து வகையான தகவல் தொடர்புகளையும் உள்ளடக்கியது) அல்லது நடத்தைக்கும் பொருந்தும் - மற்றும் அனைத்து Snapchat பயனர்களுக்கும் பொருந்தும்.
Snapchat பயனர்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும் ஆபத்துள்ள உள்ளடக்கம் அல்லது நடத்தை மீது நாங்கள் மிகவும் உணர்வுபூர்வமாக இருப்போம், மற்றும் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடும் பயனர்களுக்கு எதிராக உடனடி நிரந்தர நடவடிக்கை எடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.
கடுமையான தீங்கு என்று நாங்கள் எதைக் கருதுகிறோம் மற்றும் அதற்கு எதிராக நாங்கள் எப்படி நடவடிக்கை எடுக்கிறோம் என்பது குறித்த கூடுதல் வழிகாட்டுதல் இங்குக் கிடைக்கும்.

Snap எங்கள் சேவைகளின் மூலம் உருவாக்க AI அம்சங்களை வழங்குகிறது. சமூக வழிகாட்டுதல்கள் அடிப்படையில் உருவாக்க AI உள்ளடக்கத்தை பாதுகாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்துகிறோம், மேலும் Snapchat பயனர்கள் பொறுப்புடன் AI ஐப் பயன்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மீறுவதற்காக AI ஐப் பயன்படுத்தும் கணக்குகளுக்கு எதிராக கணக்கை ரத்து செய்யும் சாத்தியம் உட்பட பொருத்தமான நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உண்டு.

விளம்பரதாரர்களும் Discover இல் உள்ள ஊடகக் கூட்டாளர்களும், அவர்களின் உள்ளடக்கம் துல்லியமாக பொருத்தமான இடங்களில் உண்மை சரிபார்க்கப்பட்டு இருக்க வேண்டிய தேவை உள்ளிட்ட கூடுதல் வழிகாட்டுதல்களை ஒப்புக்கொள்கிறார்கள். உருவாக்குநர்களும் கூடுதல் விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களாகும்.

Snapchat-இல் தடை செய்யபட்டுள்ள உள்ளடக்கத்திற்கான குறிப்பிட்ட விதிமுறைகளை இங்கும் எங்கள் சேவை நிபந்தனைகளிலும் நாங்கள் கோடிட்டு காட்டியுள்ளோம் மற்றும் இந்த விதிமுறைகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய நாங்கள் வேலை செய்கிறோம். இந்த விதிமுறைகளைப் பயன்படுத்தும்போது, உள்ளடக்கம் செய்திக்குரியதா, உண்மையானதா, மற்றும் நம் சமூகத்தின் அரசியல், சமூகவியல், அல்லது பிற பொதுவான விஷயங்களுடன் தொடர்புடையதா என்பது உட்பட உள்ளடக்கத்தின் இயல்பை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.
நாங்கள் எப்படி உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தி எங்களின் கொள்கைகளை அமலாக்கம் செய்கிறோம் என்பது குறித்த கூடுதல் உள்ளடக்கம் இங்குக் கிடைக்கும்.
கீழே உள்ள ஒவ்வொரு பிரிவுகளிலும் எங்களின் சமூக வழிகாட்டுதல்கள் குறித்த மிகவும் விரிவான தகவல்களுக்கான இணைப்புகளையும் நாங்கள் வழங்குகிறோம்.

Snapchat அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நேர்மறையான அனுபவத்தை வழங்க வேண்டும் என விரும்புகிறோம். எந்த உள்ளடக்கம் அல்லது நடத்தை எங்கள் விதிகளின் உட்கருத்தை மீறுகிறது என்பதை எங்கள் விருப்பப்படி முடிவு செய்யும் உரிமை எங்களுக்கு இருக்கிறது.

பாலியல் உள்ளடக்கம்

  • குழந்தைகளின் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகப் படங்களைப் பகிர்தல், சிறாரை பாலியலுக்கு தயார்செய்தல் அல்லது பாலியல் வஞ்சகம் (பாலியல் மிரட்டல்) அல்லது குழந்தைகளைப் பாலியல் ரீதியாக சித்தரித்தல் உள்ளிட்ட சிறார் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகம் அடங்கிய எந்த ஒரு செயலையும் நாங்கள் தடை செய்கிறோம்.
    அத்தகை நடத்தையில் ஈடுபடும் முயற்சிகள் உட்பட சிறார் பாலியல் சுரண்டல் பற்றி கண்டறியப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் நாங்கள் அதிகாரிகளிடம் புகாரளிக்கிறோம். 18 வயதுக்கு கீழ் உள்ள ஒருவரை ஈடுபடுத்தும் நிர்வாண அல்லது பாலியலை அப்பட்டமாக வெளிப்படுத்தும் உள்ளடக்கத்தை ஒருபோதூம் இடுகையிட, அனுப்ப, முன்னனுப்ப, விநியோகிக்க அல்லது கேட்க வேண்டாம் (இதில் உங்களது அத்தகையப் படங்களை அனுப்புவது அல்லது சேமிப்பதும் அடங்கும்).

  • ஆபாச உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்துவது, விநியோகிப்பது அல்லது பகிர்வது, அத்துடன் ஆபாசப் படங்கள் அல்லது பாலியல் தொடர்புகள் (இணையம் வழியே அல்லது நேரடியாக) தொடர்புடைய வணிக நடவடிக்கைகளை நாங்கள் தடைசெய்கிறோம்.

  • பாலியல் அல்லாத சூழல்களில் தாய்ப்பாலூட்டுவது மற்றும் நிர்வாணத்தின் பிற சித்தரிப்புகள் பொதுவாக அனுமதிக்கப்படுகின்றன.

  • எங்களின் சமூக வழிகாட்டுதல்களை மீறும் பாலியல் நடத்தை மற்றும் உள்ளடக்கம் மீதான கூடுதல் வழிகாட்டுதல் இங்குக் கிடைக்கும்.

தொந்தரவளித்தல் & துன்புறுத்தல்

  • எந்த வகைத் துன்புறுத்தல் அல்லது தொந்தரவளித்தலையும் நாங்கள் தடைசெய்கிறோம். இது மற்ற பயனர்களுக்கு தேவையற்ற அப்பட்டமாக பாலியலை வெளிப்படுத்தும், ஆபாச அல்லது நிர்வாணப் படங்களை அனுப்புவது உட்பட அனைத்து வகையான பாலியல் தொந்தரவுகளுக்கும் இது நீடிக்கும். உங்களை யாரேனும் தடை செய்தால், வேறு Snapchat கணக்கிலிருந்து அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம்.

  • குளியலறை, படுக்கையறை, பாதுகாப்பு பெட்டக அறை, அல்லது மருத்துவமனை போன்ற ஒரு தனிப்பட்ட இடத்தில் இருக்கும் நபரின் படங்களை அவருக்குத் தெரியாமல் மற்றும் அவருடைய ஒப்புதல் இல்லாமல் பகிர்வது தடை செய்யப்பட்டுள்ளது, அதே போல் வேறு நபரின் தனிப்பட்ட தகவல்களைத் துன்புறுத்தும் நோக்கத்திற்காகவோ (அதாவது, டாக்ஸ்சிங்) அல்லது பிற காரணங்களுக்காகவோ அவருக்குத் தெரியாமல் மற்றும் அவருடைய ஒப்புதல் இல்லாமல் பகிர்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

  • உங்கள் Snap-இல் சித்தரிக்கப்பட்ட யாராவது அதை அகற்றச் சொன்னால், தயவுசெய்து அகற்றுங்கள்! மற்றவர்களின் தனியுரிமை உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்.

  • அனுமதிக்கப்படும் உள்ளடக்கத்தின் மீது வேண்டுமென்றே புகாரளிப்பது போன்று, எங்களின் புகாரளிக்கும் வழிமுறைகளை தவறாகப் பயன்படுத்தி மற்றொரு Snapchat பயனரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

  • எங்களின் சமூக வழிகாட்டுதல்களை மீறும் தொந்தரவளித்தல் ம���்றும் துன்புறுத்தல் மீதான கூடுதல் சமூக வழிகாட்டுதல்கள் இங்குக் கிடைக்கும்.

அச்சுறுத்தல்கள், வன்முறை & தீங்கு

  • வன்முறை அல்லது ஆபத்தான நடத்தைக்கு ஊக்கமளிப்பது அல்லது அவற்றில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு நபர், ஒரு குழு அல்லது ஒருவரின் சொத்துக்குத் தீங்கு விளைவிக்க மிரட்டவோ, அச்சுறுத்தவோ வேண்டாம்.

  • விலங்கை துன்புறுத்தல் உட்பட தேவையற்ற அல்லது அப்பட்டமான வன்முறையின் புகைப்படங்களுக்கு அனுமதி இல்லை.

  • சுய காயப்படுத்தல், தற்கொலை அல்லது உண்ணுதல் குறைபாடுகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட, சுய தீங்குப் புகழ்ச்சிகளை நாங்கள் அனுமதிப்பதில்லை.

  • எங்களின் சமூக வழிகாட்டுதல்களை மீறும் அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் தீங்கு மீதான கூடுதல் வழிகாட்டுதல் இங்குக் கிடைக்கும்.

தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது ஏமாற்றும் தகவல்

  • நிகழ்ந்த சோகமான நிகழ்வுகளை மறுப்பது, ஆதாரமற்ற மருத்துவக் கோரிக்கைகள், குடிமைச் செயல்முறைகளின் ஒருமைப்பாட்டை கெடுப்பது அல்லது தவறான அல்லது தவறாக வழிநடத்தும் நோக்கங்களுக்காக (ஜெனரேட்டிவ் AI மூலமாகவோ அல்லது ஏமாற்றும் தொகுப்பாக்கம் மூலமாகவோ) உள்ளடக்கத்தைக் கையாளுவது போன்ற தீங்கு விளைவிக்கும் அல்லது கெடுக்கும் தவறான தகவலைப் பரப்புவதை நாங்கள் தடைசெய்கிறோம்.

  • நீங்கள் வேறு ஒருவராக (அல்லது வேறொன்றாக) நடிப்பதை அல்லது நீங்கள் யார் என்பதைக் குறித்து மக்களை ஏமாற்ற முயற்சிப்பதை நாங்கள் தடைசெய்கிறோம். தீங்கு விளைவிக்கும், நையாண்டி அல்லாத நோக்கங்களுக்காக உங்களின் நண்பர்கள், பிரபலங்கள், பொது நபர்கள், பிராண்டுகள் அல்லது மற்ற நபர்கள் அல்லது நிறுவனங்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்வது இதில் அடங்கும்.

  • வெளியிடப்படாத பணம் அல்லது ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கம், பின்தொடர்பவர்களுக்கு பணம் செலுத்தும் விளம்பரங்கள் அல்லது பிற பின்தொடர்பவர்-வளர்ச்சி திட்டங்கள், ஸ்பேம் பயன்பாடுகளை மேம்படுத்துதல் அல்லது மல்டிலெவல் மார்க்கெட்டிங் அல்லது பிரமிட் திட்டங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட ஸ்பேமை நாங்கள் தடைசெய்கிறோம்.

  • மோசடியான பொருட்கள் அல்லது சேவைகள் அல்லது விரைவாகப் பணக்காரர்களாகும் திட்டங்கள், அல்லது Snapchat அல்லது Snap Inc-ஐ போன்று விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட மோசடி மற்றும் பிற ஏமாற்றும் நடைமுறைகளை நாங்கள் தடைசெய்துள்ளோம்.

  • எங்களின் சமூக வழிகாட்டுதல்களை மீறும் தீங்கிழைக்கும் பொய்யான அல்லது ஏமாற்றும் உள்ளடக்கம் மீதான கூடுதல் வழிகாட்டுதல் இங்குக் கிடைக்கும்.

சட்டத்திற்குப் புறம்பான அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள்

  • உங்களின் சட்ட எல்லைக்குள் சட்டவிரோதமானதாக உள்ள உள்ளடக்கத்தை அனுப்ப அல்லது பதிவிட, அல்லது எதாவது சட்டவிரோதமான நடவடிக்கைக்கு Snapchat-ஐ பயன்படுத்தக்கூடாது.
    சட்ட விரோதமான அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட போதைப்பொருட்கள், கடத்தல் (குழந்தைகள் மீதான பாலியல் துர்பிரயோகம் அல்லது வன்புணர்வை காட்டும் படங்கள் போன்றவை), ஆயுதங்கள் அல்லது போலியான பொருட்கள் அல்லது ஆவணங்களை வாங்குவது, விற்பது, பரிமாற்றம் செய்வது அல்லது விற்பனைக்கு உதவுவது, போன்றவை இதில் அடங்கும். பாலியல் கடத்தல், தொழிலாளர் கடத்தல் அல்லது பிற மனித கடத்தல் உட்பட எந்தவொரு சுரண்டலையும் ஊக்குவிப்பது அல்லது எளிதாக்குவதும் இதில் அடங்கும்.

  • சூதாட்டம், புகையிலை அல்லது மின்னணு புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானம் ஆகியவற்றின் அங்கீகரிக்கப்படாத ஊக்குவிப்பு உட்பட, ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள் அல்லது தொழில்களை சட்டவிரோதமாக ஊக்குவிப்பதை நாங்கள் தடைசெய்கிறோம்.

  • எங்களின் சமூக வழிகாட்டுதல்களை மீறும் தடை செய்யப்பட்ட சட்ட விரோதமான அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகள் மீதான கூடுதல் வழிகாட்டுதல் இங்குக் கிடைக்கும்.

வெறுப்பு உண்டாக்கும் உள்ளடக்கம், பயங்கரவாதம் மற்றும் வன்முறை மிகுந்த தீவிரவாதம்

  • பயங்கரவாத அமைப்புகள், வன்முறை மிகுந்த தீவிரவாதிகள் மற்றும் வெறுப்பு குழுக்கள் எங்கள் தளத்தைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதம் ��ல்லது வன்முறை மிகுந்த தீவிரவாதத்தை ஆதரிக்கும் அல்லது மேம்படுத்தும் உள்ளடக்கத்தை நாங்கள் சகித்துக் கொள்வதில்லை.

  • இனக்குழு, நிறம், சாதி, இனம், நாட்டினம், மதம், பால் நாட்டம், பாலினம், பாலின அடையாளம், இயலாமை அல்லது முதுவர் நிலை, குடிவரவு நிலை, சமூக-பொருளாதார நிலை, வயது, எடை அல்லது கர்ப்ப நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இழிவுபடுத்தும், அவதூறு பரப்பும் அல்லது பாகுபாட்டையோ வன்முறையையோ ஊக்குவிக்கும் வெறுப்புப் பேச்சு அல்லது உள்ளடக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.

  • எங்களின் சமூக வழிகாட்டுதல்களை மீறும் வெறுப்பு உள்ளடக்கம், தீவிரவாதம், மற்றும் வன்முறை நிறைந்த பயங்கரவாதம் மீதான கூடுதல் வழிகாட்டுதல் இங்குக் கிடைக்கும்.


எங்கள் செயலியில் உள்ள புகாரளிக்கும் அம்சங்களைப் பயன்படுத்தி அல்லது இந்தப் படிவத்தை நிரப்புவதன் மூலம் (உங்களிடம் Snapchat கணக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் புகாரளிக்க உங்களை அனுமதிப்பது) நீங்கள் எப்போதும் எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவினருக்கு ஒரு புகாரைச் சமர்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த வழிகாட்டுதல்களின் மீறல்களை நிர்ணயிப்பதற்கான இந்த அறிக்கைகளை நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம். இந்தச் சமூக வழிகாட்டுதல்களை நீங்கள் மீறினால், மீறும் உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றலாம், உங்கள் கணக்கின் பார்க்கக்கூடிய நிலை
யை நிறுத்தலாம் அல்லது கட்டுப்படுத்தலாம் மற்றும்/அல்லது சட்ட அமலாக்கத்திற்கு அறிவிக்கலாம். மனித உயிருக்கு உடனடி அச்சுறுத்தலாக இருக்கும் நடவடிக்கையின்போது சட்ட அமலாக்க அமைப்பிற்கும் நாங்கள் தகவலளிப்போம்.
இந்த வழிகாட்டுதல்களை மீறியதற்காக உங்களின் கணக்கு நீக்கப்பட்டால், Snapchat-ஐ மீண்டும் பயன்படுத்த நீங்கள் அனுமதிக்கப்படமாட்டீர்கள் அல்லது இந்த நீக்கத்தை எந்த விதத்திலும் தவிர்க முடியாது.

Snapchat-இல் மற்றும் அதற்கு வெளியே மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாக, எங்கள் சொந்த விருப்பத்தின் பேரில், நாங்கள் நம்புவதற்கு காரணமுள்ள பயனர்களுக்கான கணக்கு அணுகலை அகற்ற அல்லது கட்டுப்படுத்தும் உரிமையை Snap கொண்டுள்ளது. இதில் வெறுப்புக் குழுக்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள், வன்முறையைத் தூண்டுவதில் பெயர் பெற்ற நபர்கள் அல்லது பிறருக்கு எதிராக கடுமையான தீங்கு விளைவிப்பவர்கள் அல்லது மனித உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நாங்கள் நம்பும் நடத்தை ஆகியவை அடங்கும். அத்தகைய நடத்தையை மதிப்பிடும்போது, கணக்கு அணுகலை நீக்குவதா அல்லது கட்டுப்படுத்துவதா என்பதைத் தீர்மானிப்பதற்கு நிபுணர்களின் அல்லது சட்ட அமலாக்க அமைப்பின் வழிகாட்டுதலை நாங்கள் பெறக்கூடும்.

Snapchat இல் பாதுகாப்பு பற்றிய மேலும் தகவலுக்கு, எங்கள் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிடவும். அங்கு, உங்கள் தனியுரிமை அமைப்புகளைப் புதுப்பித்தல், உங்கள் உள்ளடக்கத்தை யார் பார்க்கலாம் என்பதைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் பிற பயனர்களைத் தடுப்பது போன்ற செயல்கள் உட்பட, உங்கள் Snapchat அனுபவத்தை நிர்வகிப்பதற்கான விரிவான வழிமுறைகளைக் காணலாம்.